Description
இந்த போட்காஸ்ட் இந்தியாவில் வாழந்து நாட்டு வளர்ச்சிக்காக உழைத்து , சுதந்திரத்துக்காக போராடிய தலைசிறந்த தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு .
15 Episodes
access_time3 years ago
ஜவஹர்லால் நேரு , இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்) ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
access_time3 years ago
லால் பகதூர் சாஸ்திரி, இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார்.
access_time3 years ago
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
access_time3 years ago
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
access_time3 years ago
பால கங்காதர திலகர், ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.
access_time4 years ago
அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
access_time4 years ago
சர்தார் வல்லப்பாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.
access_time4 years ago
டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர்.
access_time4 years ago
பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.
access_time4 years ago
கோபால கிருஷ்ண கோகலே , இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும் ஆவார். அந்த அமைப்பின் மூலம் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் இதர அரசியலமைப்புகளில் பணிபுரிந்ததன் மூலம், கோகலே ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் முக்கியமாக அதை மட்டுமே செய்யாமல் அவர் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல்.
access_time4 years ago
பகத் சிங் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் மாவீரன் பகத்சிங் என அழைக்கப்பட்டார் .ஆங்கிலேயர்களை எதிர்த்த ஒரு குடும்பத்தில் பிறந்த இவர் தனது சிறு வயது முதல் போராட்டக்குணம் மிகுந்தவராக காணப்பட்டார்.
access_time4 years ago
காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, என்றெல்லாம் புகழ்வர். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.
access_time4 years ago
அம்பேத்கர் என்றுஅழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், ஒரு இந்திய நீதிபதி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவர் பௌத்த இயக்கத்தை ஊக்கப்படுத்தினார் மற்றும் தீண்டத்தகாதவர்கள் (தலித்துகள்) மீதான சமூக பாகுபாடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். பெண்கள் மற்றும் தொழிலாளர் உரிமைக்காகவும் போராடினர் . அவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் மற்றும் நீதி அமைச்சராக இருந்தார்.இந்திய குடியரசின் தந்தையாகவும் கருதப்பட்டார் .
access_time4 years ago
இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் போராடியவர் சுபாஸ் சந்திர போஸ் (நேதாஜி என்றும் அழைக்கப்படுகிறார்) . ஒத்துழையாமை இயக்கத்தின் பங்கேற்பாளரும், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவருமான அவர் மிகவும் போர்க்குணம் கொண்டவராக இருந்தார், மேலும் சோசலிசக்கொள்கைகளையும் ஆதரித்தார்.
access_time4 years ago
எம். ஜி. ஆர் என்று பிரபலமாக அழைக்கப்படும் மருதுர் கோபாலன் ராமச்சந்திரன், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார், இவர் 1977 மற்றும் 1987 க்கு இடையில் பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தார் . அவர் ஒரு பரோபகாரர் மற்றும் மனிதாபிமான கொண்ட நல்ல தலைவராய் வாழ்ந்தார் , தமிழ் ஆர்வலராக நன்கு அறியப்பட்டவராகவும் இருந்தார்.