Description
கிறித்தவர்களின் புனித நூலாகிய விவிலியத்தில் பல செய்திகளை உள்ளடக்கி, இயேசுவின் “உவமைகள்” மற்றும் பைபிளில் சொல்லப்பட்ட கதைகளை பல விதங்களில் உங்களுக்கு வழங்கும் மாறுபட்ட நிகழ்ச்சி.
3 Episodes
access_time5 years ago
விவிலியத்தில் வரும் சிறுவன் சாமுவேல் கதை, நீதி சொல்லும் கதையாக இருக்கிறது. இக்கதையில் ஏலி தாத்தா மற்றும் சிறுவன் சாமுவேல் இடையிலான உறவு மற்றும் கடவுள், சாமுவேலிடம் சொன்னது என்ன என்பதை பற்றி கேட்டு தெரிந்து கொள்வோம்.
access_time5 years ago
எலியா "யாவே என் கடவுள்" எனும் பொருளுடையவர் ஆவார். 1 அரசர்கள் குறிப்பிடுவதன்படி, கி.மு. 9ம் நூற்றாண்டில் ஆகாப் அரசன் காலத்தில் தென் இசுரேல் அரசில் வாழ்ந்த புகழ் பெற்ற தீர்க்கதரிசியும் அற்புதம் செய்தவரும் ஆவார். இவருக்கு காகங்கள் எப்படி உணவு தந்தன பஞ்சஜத்தில் இருந்து இவர் எப்படி தப்பித்தார் என்பதை இப்பதிவில் கேட்கலாம்
access_time5 years ago
நோவாவின் பேழையினைக் குறித்த விவரிப்பு விவிலியத்தின் தொடக்க நூலின் காணப்படுகின்றது. தொடக்க நூலுக்கு வெளியே நோவா பற்றிய குறிப்புக்களை எசாயா, எசேக்கியேல், புலம்பல், மத்தேயு நற்செய்தி, லூக்கா நற்செய்தி, 1 பேதுரு, 2 பேதுரு ஆகியவற்றில் காணலாம். திருக்குர்ஆன் உட்பட பிற்காலத்தில் ஆபிரகாமிய சமயங்களின் மரபுக்கதைகளில் இவர் முக்கிய இடம் பெறுகின்றார். ஆபிரகாமிய சமயங்களின் நம்பிக்கையின்படி, நோவா என்பவர் ஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த பத்தாவதும் இறுதி பெருந்தந்தையரும் ஆவார். நோவா என்னும் பெயருக்கு எபிரேயத்தில் 'ஆறுதல்' என்பது பொருள். நோவாவின் பேழைக் கதையினை இப்பதிவில் கேட்கலாம்.











