Description
Listen to Kalathai Vendra Kadhal- A Tamil podcast exclusively on VAARTA.
4 Episodes
access_time1 year ago
காதல்... கலை... இயற்கையோடு தன்னை இழைத்துக் கொண்ட பதின்பருவத்து வாலிபன் ரோமியோ. ரோஸலின் என்பவளை உருகிக் காதலிக்கிறான். அவள் ரோமியோவின் காதலை ஏற்காத நிலையில், எதேச்சையாக ஜூலியட்டைக் காண்கிறான். அதோடு அவன் மனம் ஜூலியட் வசமாகிவிடுகிறது. உருகி உருகிக் காதலிக்கிறான். பதின்பருவத்தில் இருக்கும் ஜூலியட்டும், உடனே ரோமியோவிடம் காதல் கொள்கிறாள். ஆனால், இருவரின் குடும்பங்களுக்கு இடையிலும் பரம்பரைப் பகை கனன்று கொண்டிருக்கிறது. காதலிக்க ஆரம்பித்த பிறகுதான் நாம் பரம எதிரியின் முகாமில் மனதைப் பறி கொடுத்திருக்கிறோம் என்ற விஷயம் இருவருக்கும் தெரிய வருகிறது.
access_time1 year ago
காதல் கதைகள் பல நம் இந்தியாவில் தோன்றியிருக்கிறது பல காதல் கதை இருந்தாலும் தாஜ்மஹால் என்ற அழகிய சின்னத்தை கொடுத்த ஷாஜகான் மும்தாஜ் காதல் கதையை யாராலும் மறக்க முடியாது.
access_time1 year ago
வரலாற்றுப் புத்தகத்தின் வண்ணமயமான வார்த்தைகளுக்கு நடுவே விஷத்தைக் கக்கும் கருநாகங்களும் நெளிந்திருக்கின்றன. வானத்தை வளைத்து வட்ட மாலையாக மாற்றிவிடக்கூடிய வீரனை சுண்டு விரலுக்குச் சுளுக்கெடுக்க வைத்திருக்கிறது காதல். அன்பிற்கு அடிமையாகிப்போன பேரரசர்களில் மார்க் அன்டோனிக்கு முதலிடம் தந்திருக்கிறது காலம். எகிப்தில் பிறந்த கிளியோபாட்ரா, ரோம் நகர சாம்ராஜ்யத்தை ஆள வந்த கதைதான் காதலுக்கு காலம் அளித்திருக்கும் சலுகைக்குச் சாட்சி
access_time1 year ago
நமது மண்ணிலேயே எண்ணற்ற காதல் காவியங்கள் இருக்கும் போது நாம் அன்னிய நாட்டின் காதலர் தினத்தை கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறையில் உருவெடுத்தது தான் அம்பிகாபதி, அமராவதி காதல். காதலில் வெற்றி பெற்று அமராவதியை மணக்க விதிக்கப்பட்ட நிபந்தனையில் வெற்றி பெற இருந்த சில நொடிகளில் காதலி உணர்ச்சிவசப்பட்டதால் காதலன் கொல்லப்பட்டான்.